சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார்.அதில் அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்பினை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தமிழகத்தில் தற்பொழுது இத்துறையின் கீழ் 1,324 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும், 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, பள்ளிகளில் இடை நிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 11 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 13 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் முதல்வர் பழனிசாமி.
No comments:
Post a Comment