உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை, 23 சதவீதமே அதிகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில், பார்லி நிலைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு, மின்னணு பணப்பரிவர்த்தனை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரிடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 60.8 லட்சத்தில் இருந்து, 70.7 லட்சம் மட்டுமே உயர்ந்ததாக தெரிவத்துள்ளது.
இதனிடையே, மின்னணு பணப்பரிவர்த்தனை முறைக்கு மாறும், இந்தியா போன்ற நாடுகளில், இணைய வழி தாக்குதல் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் இணைய பாதுகாப்பு சேவை வழக்கும் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன
No comments:
Post a Comment