நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 22, 2017

நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'

நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகள் உள்ளன.
கவுன்சிலிங் : தமிழகத்தில், ஒன்பது நிகர்நிலை பல்கலைகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்தாண்டு முதல், நிகர்நிலை பல்கலையில் உள்ள இடங்களையும், மத்திய அரசு,கவுன்சிலிங் மூலம் நிரப்புகிறது.
இடம் காலி : இதற்கான, முதற்கட்ட கவுன்சிலிங், ஆன்லைன் மூலம், சமீபத்தில் நடந்தது. இதில், 8,801 பேர் சீட் பெற்றுள்ளனர். இவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த, பல்கலையில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங்,ஆக., 5 முதல், 7 வரை நடக்கிறது.
அதே போல், மருத்துவப் படிப்பகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும். இல்லை என்றால், அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும்.

No comments:

Post a Comment