மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 6, 2017

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்
மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு விரோதமாக அரசாணை உள்ளது என்றும் மனுதாரர் வாதம் செய்துள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 5 வரை வகுப்புக்கு தலா 30 மாணவர் தான் சேர்க்க முடியும் என அரசாணை வெளியிட்டிருந்தது. 6 முதல் 8 வரை வகுப்புக்கு 35 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்திருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் 4 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அரசாணையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

No comments:

Post a Comment