ஆதார் பதிவில் குடும்ப தலைவரின் புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதாலும், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பதாலும் ஸ்மார்
கார்டுகள் அச்சடிக்க காலதாமதமாகிறது.
இதையடுத்து மின்னணு குடும்ப அட்டைகள் உடனடியாக அச்சடித்து வழங்கிட ஆதார் எண் இணைப்பு மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் சேகரிக்கும் பணி தற்போது அந்தந்த நியாய விலைக்கடைகளில் நடந்து வருகிறது. இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க இன்று 6-ந் தேதி முதல் வரும் 13-ந்தேதி வரை வரும் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நீங்கலாக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தினசரி பணிகளோடு ஆதார் எண் இணைத்தல் மற்றும் புகைப்படம் பெறும் பணியினையும் விற்பனையாளர்கள் மேற்கொள்வர்.
ஆகவே இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதி நியாயவிலைக்கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கவும், குடும்பத்தலைவர் அல்லது தலைவியின் புகைப்படத்தை நேரில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment