அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்: பப்பு யாதவ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 21, 2017

அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்: பப்பு யாதவ்

அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்பதை கட்டாயமாக்குவரை கல்வியில் சமத்துவம் என்பது பயனற்றுதான் போகும் என்று பப்பு யாதவ் கூறியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனி நபர்கள்
மசோதாக்கள் குறித்தான விவாதங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் 19 மசோதங்கள் குறித்தான விவாதங்கள் நடைபெற்றது. இதில் 6 அரசமைப்புச் சட்டத்தில்  திருத்தங்களை வலியுறுத்துகிறது.
அப்போது கல்வி குறித்தான விவாதத்தில் மாதேபுரா எம்பியும், ஜன் அதிகார் கட்சியின் தலைவருமான பப்பு  யாதவ் பேசும்போது, நீதிபோதனை கல்வி இல்லாமல் கல்வி என்றும் முழுமை பெறதாது. 12 வகுப்புகள் வரை விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் வரை கல்வியில் சமத்துவம் என்பது சாத்தியமில்லை” என்றார்.

No comments:

Post a Comment