அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 10, 2017

அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை

அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை
அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதால், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்தாண்டைவிட தற்போது அரசு கலைக் கல்லூரி களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்கப்பட்டு புதிதாக 268 பாடப்பிரிவுகள் கலைக் கல்லூரிகளில் கொண்டு வரப்படு கிறது. வரும் கல்வியாண்டில் 7 புதிய கல்லூரிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வியிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே, 65 கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத் தில் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment