போலி சாதி சான்றிதழ் கொடுத்து பட்டம் பெற்று இருந்தால் அந்த பட்டம் செல்லாது, அரசு பணி பெற்று இருந்தால் அவர்களை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் பணி நீக்கம் செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
🔹 போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிரா அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
🔸 இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்மகாராஷ்டிரா அரசின் உத்தரவு செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
🔹 மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
🔸 இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒருவர் சாதி போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment