TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 3, 2017

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு கட்டாயப்படுத்தாது.பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

No comments:

Post a Comment