பங்களிப்பு ஓய்வூதிய நிதி 18 ஆயிரம் கோடி எங்கே? ஆளுக்கொரு பதில் தரும் அரசு செயலர்கள்
திண்டுக்கல், எரியோடு ஆசிரியர் பிரெடெரிக் எங்கெல்ஸ், ஆகஸ்டில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பங்களிப்புஓய்வூதிய நிதி குறித்து விளக்கம் கோரினார்.அவரது கேள்வியில், '2017 - 2018 சட்டசபை மானிய கோரிக்கை,கொள்கை விளக்க குறிப்பில், 1.4.2003க்கு பின் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு தொகை மற்றும் வட்டி உட்பட, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், தமிழக அரசின் ஓய்வூதிய பொது கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.'கடந்த மார்ச் 31ம் தேதி நிலையில், ஓய்வூதிய பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள மொத்த தொகை எவ்வளவு, அது எந்தெந்த கணக்கு தலைப்புகளில் உள்ளது' என்ற விபரம் கோரி இருந்தார்.இதற்கு, செப்., 5ல், அரசு சார்பு செயலர் பாஸ்கரன் அளித்த பதிலில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு தொகை, வட்டியுடன் ஒட்டுமொத்த தொகை, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், மத்திய அரசின் கருவூலப் பட்டியலில் முதலீடு செய்யப்படுகிறது' என, பதில் அளித்துள்ளார்.
பொதுக் கணக்கில் முதலீடு
பின், செப்., 21ல் அரசின் கூடுதல் தலைமை நிதித் துறை செயலர் அளித்த பதிலில், '1.4.2003 அல்லது அதற்கு பின்,தமிழக அரசு பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.'அரசு பணியாளர்களிடம் இருந்து புதியஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பாக, அடிப்படை ஊதியம்மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், அரசும் சமபங்கு தொகை செலுத்துகிறது.'அரசு தகவல் தொகுப்பு விபர மைய உதவியுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள்பராமரிக்கப்படுகிறது.இந்த நிதி, 18 ஆயிரத்து, 16 கோடி ரூபாய், அரசின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியநிதி, மத்திய அரசின் கருவூலப் பட்டியலில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, அரசு செயலர் பதில் வழங்கிஉள்ளார். அரசு கூடுதல் தலைமை நிதி துறை செயலர் பதிலில், அரசின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது, அரசு ஊழியர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.
No comments:
Post a Comment