ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 14 ஆம் தேதி வரை தேசிய தபால் வாரம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தவாரம் தேசிய தபால் வாரமாக அனுசரிக்கப்பட்டுள்ளது. 1874 ஆம் ஆண்டு சர்வதேச போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்ட தினமே தபால் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து பேசிய, மூத்த தபால் துறை கண்காணிப்பாளர் டாக்டர்.அமன்ப்ரீத் சிங்,”மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தபால் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. விரைவில், பணப்பரிமாற்றம், வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்தல் போன்ற வசதிகள் கொண்டுவரப்பட உள்ளது,” எனத் தெரிவித்தார்.
இன்றைக்கு நாம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கருத்துகளையும் செய்திகளையும் பகிர்ந்து வருகிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை இணைத்து வரும் தபால் துறை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment