அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி்யார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை:
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு உதவி பெறும் சி்றுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை என்று நீதி்மன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்ட நாளான 23.8.2010-க்குப் பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே ஆசிரியர் நியமனம் நடைபெற வேண்டும்.
அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். எனவே, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, டெட் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பட்டதா்ரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து உறுதிபடுத்த வேண்டும்.
மேலும், கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியிட்ட மத்திய அரசிதழில் (கெஜட்) சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் 31.3.2015-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 4 ஆண்டுகளுக்குள் அதாவது 31.3.2019-க்குள் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் டெ தேர்ச்சிபெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
No comments:
Post a Comment