EMIS இணையதளத்தில் இரட்டை எண்கள்! தலைமையாசிரியர்கள் குழப்பம்!? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 4, 2017

EMIS இணையதளத்தில் இரட்டை எண்கள்! தலைமையாசிரியர்கள் குழப்பம்!?


EMIS இணையதளத்தில் இரட்டை எண்கள்! தலைமையாசிரியர்கள் குழப்பம்!?
பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒரு மாணவருக்கு, இரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால், எதை ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியாமல், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்ட, பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது. இதில், 2012 முதல், தகவல்கள் பதிவேற்றியும், தொழில்நுட்ப குளறுபடிகளால், தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.


கடந்தாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாமினல் ரோல் எனப்படும் பொதுத்தேர்வு எண், எமிஸ் இணையதள தகவல் அடிப்படையிலே வழங்கப்பட்டன.

இத்தகவல் தொகுப்பை பயன்படுத்தி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட் கார்டு’ வழங்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய மேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.

இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும், சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமையாசிரியர்களுக்கு, எமிஸ் இணையதளத்தை பயன்படுத்தும் முறை, குறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், ஒரே நேரத்தில், தகவல்களை உள்ளீடு செய்ததால், இணையதளம் முடங்கியது.

தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர், வகுப்பு, முகவரி, ரத்த வகை முதற்கொண்டு, 40க்கும் மேற்பட்ட தகவல்களை, எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்து, பிரத்யேக எண் பெறப்பட்டது.

நடப்பாண்டில், புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, எமிஸ் எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களை, புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்த போது, மற்றொரு அடையாள எண் உருவாகியுள்ளது. இதில் எதை கல்வி ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியவில்லை.
சர்வர் முடங்கியிருப்பதால், வரும் 4ம் தேதிக்கு பின், தகவல்களை இணைக்கலாம் என, மட்டுமே, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை பதிவு எண் குறித்து, தெளிவான விளக்கம் அளிக்கவில்லை’ என்றனர்


No comments:

Post a Comment