*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 2, 2019

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

03-09-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள் எண் - 291*
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
 தீமை இலாத சொலல்.
மு.வ உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
கருணாநிதி  உரை:
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
ஒரு ஆசிரியரின் வாழ்க்கை பல மாணவ மணிகளுக்கு ஒளி விளக்காக மாறும். ஆகவே எல்லா ஆசிரியர்களும் நல் ஆசிரியர்களாக திகழ வேண்டும்.
 
  - அப்துல் கலாம்
✳✳✳✳✳✳✳✳
*பழமொழி மற்றும் விளக்கம்*
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
நாம் அறிந்த விளக்கம் :
சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண இயலாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும் என்பது நாம் அறிந்த விளக்கம்.
விளக்கம் :
சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு. சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும் தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத் துன்பம். அதை முழுவதும் நீக்க வேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் உள்ள கற்களை நன்றாக பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்க வேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக் கூட நீக்காமல் சோற்றை முழுங்கும் ஒருவன் சோற்றில் இருக்கும் கல் போல அவனது தினசரி வாழ்வில் வரவழைத்துக் கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தையும் அறிந்து அதனைத் தடுக்கும் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழி பிறக்கும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
♻♻♻♻♻♻♻♻
*Important  Words*
 Oleander  அரளிப்பூ
 Orange  ஆரஞ்சு
 Palm Fruit  பனம்பழம்
 Papaya  பப்பாளி
 Peas  பாட்டாணி
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*ஆங்கில பழமொழி*
Out of sight out of mind.
கண்ணில் படாதது மனதிலும் படாது.
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?
*வெங்காயம்*
2. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
*முட்டை*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்து கொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளம் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புல்லை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*
T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*
🔮பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்தித்தனர்.
🔮பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கினார்.
🔮சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
🔮தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
🔮தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் கோடிக்கு பில்கேட்ஸ் - மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினிக்கு தங்கம் - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்.
🔮2-வது டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ‘ஹாட்ரிக்’கில் நிலைகுலைந்தது வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்னில் ஆல்-அவுட்.
🔮Moon lander separation successful, says ISRO.
🔮India accepts Pakistan’s offer of consular access to Kulbhushan Jadhav.
🔮12% of Tamil Nadu government school kids have low iodine levels.
🔮TN may host next informal summit between Modi and Xi Jinping in Oct.
🔮Get a life: Sunil Gavaskar to those faulting Bumrah's action.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment