இந்தியாவில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 25, 2021

இந்தியாவில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு அனுமதி கேட்டு வல்லுநர் குழுவுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. 

        அதனை ஆய்வு செய்த வல்லுநர் குழு, மருந்துகளின் பரிசோதனை தரவுகளை ஆய்வுசெய்து, அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகள் மற்றொரு நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன் பிறகு டிசிஜிஐ, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தரவுகளைக் கோரியது. அதன் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டு அனுமதியை வழங்கி உள்ளது. இந்த மருந்து இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment