காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 950க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தக்குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்களில் சிக்கி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது என்றும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் விருப்பக் கடிதம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment