வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட புத்தர்நகர் குடியிருப்பு பகுதியில் 23.12.2021 வியாழன் அன்று எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் மணி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதி திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய்வு துறையின் எரிபொருள் சிக்கன ஆராய்ச்சி சங்கத்தின் கவுரவ விரிவுரையாளர் தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று எரிபொருள் சிக்கனம் பற்றிய தகவல்களை எடுத்து கூறினார். வாகனங்களை சீரான வேகத்தில் இயக்க வேண்டும். சாலை சந்திப்பு சிக்னல்களில் காத்திருக்கும்போது வாகன இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும், வாகனத்தின் காற்றழுத்தத்தை சரியாக பராமரிக்க வேண்டும், விறகு அடுப்பு பயன்படுத்தும்போது புகை போக்கி வழியாக புகை செல்வதை உறுதிபடுத்த வேண்டும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுநிலை விரிவுரையாளர் மணி பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளை விளக்கி கூறினார். பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பற்றி விளக்கி கூறி, இத்திட்டத்தில் தன்னார்வலராக சேருமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
பள்ளிகுப்பம், குடியாத்தம் ஒன்றியம்,
வேலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment