பள்ளி வேலை நேரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் :
மனுதாரர் திரு.ஆ.மலைக்கொழுந்தன் என்பாரது 22.11.2021 நாளிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழான மனுவில் கோரப்பட்டிருக்கும் தகவல் இனங்கள் 1 முதல் 9 வரைக்கான தகவல் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
வினா எண் .1 க்கான தகவல் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 4.10 முடிய
வினா எண் .2 க்கான தகவல் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காலை 8.45 மணிக்கும் மற்றும் ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் வருகை தர வேண்டும்.
வினா எண் .3 மற்றும் 4 க்கான தகவல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 முடிய .
வினா எண் .5 க்கான தகவல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வருகை தர வேண்டும்.
வினா எண் .6 க்கான தகவல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
வினா எண் .7 க்கான தகவல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் , ஆசிரியர்கள் குழுவின் தீர்மானம் மற்றும் உயர் அலுவலர்களின் ஒப்புதல் பெற்று வேலை நேரம் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.
வினா எண் .8 க்கான தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை
No comments:
Post a Comment