டிச.28 CEOக்கள் கூட்டம் - ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை!
பள்ளிகளை ஜனவரி 3ல் முழுமையாக திறப்பது குறித்து, 28ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுடன், சென்னையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், செப்., 1 முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சுழற்சி முறையில், காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜன., 3ம் தேதியில் இருந்து, 6ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், முழு நாளும் பள்ளிகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, நேரடி வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய, 28ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது.
பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
இந்த கூட்டத்தில், பள்ளி கட்டட விபத்துகள், அதற்கு பின் நடந்த கட்டட ஆய்வுகள், மாணவியருக்கான பாலியல் பிரச்னைகள், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment