இந்தியாவில் புதிய பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் தத்தாத்ராயா சஹஸ்ரபுதே கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
அதாவது கல்லூரி வளத்தை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதனால்தான் புதிய பொறியியல் கல்லூரிகளில் முதலீடு செய்வது சரியல்ல.இன்றைய நிலவரப்படி, கல்லூரிகளில் பாதியளவுதான் தேவை என்றே கூறலாம். தற்போதுள்ள பொறியியல் கல்லூரிகள் பாதியாக குறைந்தாலும் மாணவர்கள் சேர்க்கை கிடைக்கும்.
தேவைக்கு அதிகமான இடங்கள் இருந்தால், மாணவர்களின் கட்டணத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைவாக இருக்கும். இது நிறுவனத்தின் வளங்களையும் பாதிக்கும். ஆசிரியர்களின் நியமனத்தையும் பாதிக்கும்.
குறைந்த வருவாயுடன், குறைந்த திறன்களைக் கொண்ட ஆசிரியர்களை நியமித்தால், அவர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற வேண்டும்.
அது இறுதியில் கல்வியின் தரத்தை பாதிக்கும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு 2024 வரை புதிய பொறியியல் கல்லூரிகளைத் திறக்கக் கூடாது என நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment