TN_ EMIS APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 14, 2021

TN_ EMIS APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்...

TN_ EMIS APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்... 

 TN_ EMIS APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்... 

 📍 TN_ EMIS APP- ல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நன்கு அறிவர் . 

 📍பதிவுகளை Offline- லும் செய்ய இயலும் . Network செழுமையான இடங்களில் பதிவுகள் உடனடியாக server சென்றடைகிறது. அதற்கான Acknowledgement- தான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வகுப்புகள் பச்சை நிறத்தில் மாறுவது. அவ்வாறு பச்சை நிறம் வராமல், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டால் , நம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனால் serverரை சென்றடையவில்லை என்று அர்த்தமாகும். server- ரை சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளில் ஒன்று பள்ளி அமைவிடத்தில் எந்த ஒரு Network வலுவுடன் இல்லாமல் இருப்பது. 

 📍இரண்டாவது கைபேசியில் உள்ள ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவை பதிவுகளை உடனடியாக வெளிச்செல்ல முடியாதபடி தடுத்தல். இந்த சிக்கல் கைபேசியின் இயக்க நினைவாற்றலை (RANDOM ACCESS MEMORY) பொறுத்தது. 

 📍 பதிவுகள் server சென்றடைந்தாலும், அறிக்கை பகுதிக்கு (REPORT MODULE ) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பதிவுகள் சென்றடைவதால்', ஒரு மணி நேர இடைவெளியில் server-ரை சென்றடைந்த பதிவுகள் அடுத்த ஒரு மணி நேரம் வரை அறிக்கையில் இடம்பெறுவதில்லை. இது பள்ளிகளிடையே நிறைவின்மை ஏற்படுத்துகிறது. 

📍01.12.2021 அன்று நடைபெற்ற மதிப்புமிகு ஆணையர் அவர்களின் கூட்டத்திலும் ,இன்று 13.12.2021 நடைபெற்ற மரியாதைக்குரிய மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆய்வு கூட்டத்திலும் வருகை பதிவை ஒவ்வொரு நாளும் நூறு சதவிகிதம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் : 

🎯அந்நாளைய பதிவுகள் மறுநாள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். 

🎯எனவே server-க்கு பதிவுகள் சென்றடைவதில் ஏற்படும் காலதாமத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மாலைக்குள் SYNC செய்துகொள்ளவேண்டும். 

🎯 மாலை வரை SYNC செய்ய அனுமதிக்கப்படுவதால் ,பதிவை மாலையில் மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. 

🎯 காலையில் வகுப்புகள் துவங்கும்போதே பதிவுகளை ONLINE/OFFLINE இல் முடித்துவிடவேண்டும் . 

🎯 எனவே பதிவேற்றம் செய்யும்போதே பதிவு செய்யும் நேரமும்(PUNCHING TIME ) பதிவாகும் என்பது முக்கிமானது. 

🎯தகவல் எந்த நேரத்தில் server சென்றடைந்தாலும் PUNCHING TIME மாறாது. 

🎯தொழில்நுட்ப காரணங்களால் தகவல் சர்வரை அடைவதில் ஏற்படும் காலதாமதம் புரிந்துகொள்ளப்படும். 

🎯ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பெறப்படும் அறிக்கை மறுநாள் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

🎯எனவே அனைத்து பள்ளிகளும் NETWORK ISSUE வை காரணம் காட்டாமல் அன்றய சரியான பதிவுகளை மேற்கொண்டு 100% ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment