காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி, மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் ஊராட்சி பெரிய நத்தம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பெரிய நத்தம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அங்கு ஆசிரியர்களிடம், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தினார்.
பின்னர் அவர், பள்ளி மாணவ, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி, பாடங்கள் எளிமையாக புரிகிறதா, கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் மனநிலை எப்படி உள்ளது என கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் 4 மணிவரை அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வகுப்புகள் நடத்தி அவர்களது மனநிலை மேம்படும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என கூறினார். கலெக்டர் ஆர்த்தி திடீரென மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியது, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment