மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, பொதுமக்கள், கருத்து கேட்கப்பட்டதை அடுத்து, புதிய கட்டண ஆணையை, வரும் 13ம் தேதி வெளியிட, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.இதனால், 15ம் தேதி முதல், தமிழகத்தில், மின் கட்டணம் உயர்வு, அமலுக்கு வரும் என, தெரிகிறது.
தமிழ்நாடு மின் வாரியம், நிர்வாக சீர்கேடுகளால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை
உயர்த்த முடிவு செய்துள்ளது.மின் கட்டணம் உயர்வு தொடர்பாக, சென்னை, நெல்லை, ஈரோட்டில், மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில் பங்கேற்றவர்கள், மின் கட்டணத்தை உயர்த்த, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்தும், இதுவாகவே உள்ளது.
இந்நிலையில், மக்கள் தெரிவித்த கருத்து, ஆலோசனை மற்றும் ஆட்சேபனை குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், தமிழக அரசின் அதிகார மையத்துடன், சென்னை தேனாம்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, புதிய மின் கட்டண ஆணையை, வரும் 13ம் தேதி வெளியிட, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. 15ம் தேதி முதல், மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என, தெரிகிறது.ஆனால், தேசிய கட்டண கொள்கைக்கு எதிராக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டண ஆணையை நிர்ணம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:மின் கட்டணம் நிர்ணயம் செய்வதில், 'தேசிய கட்டண கொள்கை' என்ற, மத்திய அரசின் ஆணைப்படி செய்ய வேண்டும்.அதன்படி, 11, 22, 33, 110 கிலோவோல்ட் என்ற அளவில், மின்சாரம் வினியோகம் செய்யும் போது, ஒவ்வொரு அளவிற்கு ஏற்ப, தனித்தனியாக, மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

No comments:
Post a Comment