வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 1, 2015

வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார்

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2015-16 கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு அரசு பாடநுால் கழகத்திலிருந்து கோவை வந்துள்ளன.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. வரும் 2015-16 கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம் அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறது. தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment