இன்று உலக நுகர்வோர் தினம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 15, 2015

இன்று உலக நுகர்வோர் தினம்


1960 ஆம் ஆண்டில் லண்டனை மையமாகக் கொண்டு சர்வதேச நுகர்வோர் Consumers International (CI)எனும் அமைப்பு  ஆரம்பிக்கப் பட்டது.

இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் இணைந்து நுகர்வோர் உரிமைக்கு  வலுவான அடித்தளமிட்டன.  1962 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, அமெரிக்க காங்கிரஸில் (நம் நாடாளுமன்றம் போன்றது)  நுகர்வோர்உரிமை பற்றிப் பேசினார். அவர்தாம் நுகர்வோர் உரிமைகளுக்கு வழி வகுத்த முனோடியவார்.


நுகர்வோர் பாதுகாப்புக்காக ஐக்கியநாடுகள் சபை வழிகாட்டுச் சட்டங்களை U N Guide lines for Consume Protection (UNGCP) வகுத்துள்ளது. 1985 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையால் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் பிறகு உலகில் ஏற்பட்ட டெக்னாலஜி முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு, மேம்படுத்தப் பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின்படி நுகர்வோருக்கு,

* அடிப்படைத் தேவைகளில் திருப்தி அடையும் உரிமை(the right to the satisfaction of basic needs)

* பாதுகாப்பு உரிமை(The right to safety)

* தகவல்கள் தெரிந்து கொள்ளும் உரிமை (The right to be informed)
* தேர்ந்தெடுக்கும் உரிமை (The right to choose)

* உத்தரவாதம் பெறும் உரிமை  (The right to be heard)

* நிவர்த்தி பெறும் உரிமை (The right to redress)

நுகர்வோர் உரிமை கல்வி பற்றித் தெரிந்து கொள்ளும்  உரிமை (The right to consumer education)

* ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை (The right to a healthy environment)

போன்ற உரிமைகள் உள்ளன.

நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றேகடமைகளும்   இருக்கின்றன. நாம் வாங்கும் சாமான்களின் தரம் அவற்றின் விலை மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். ஐ எஸ் ஐ போன்ற முத்திரைகள் உள்ளனவா, சாமான்களின் விலை என்ன, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டுள்ளனவா, அந்தச் சாமான்களின் தயாரிப்பு விபரங்கள், அதில் அடங்கியுள்ள பிற துணைப்பொருட்கள் போன்றவற்றை அறிவதோடு நாம் கொடுக்கும் விலைக்குத் தரும் ரசீதில் வரி உட்பட சரியான விபரங்கள் உள்ளனவா எனப்பார்க்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.
அதுபோன்றே ஆஸ்பத்திரிகள், பேங்குகள், பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி மற்றும் விமானம் முதலான சேவைகளைப் பயன்படுத்தும்போதும் அவற்றிற்கு நாம் செலுத்தும் சேவைக்கட்டணத்துக்கு உரிய ரசீதுகள் அல்லது டிக்கெட்டுகளில் சரியான விபரங்கள் உள்ளனவா எனப் பார்க்கும்கடமையும் நமக்கிருக்கிறது.

நாம் நமது உரிமைகளைத் தெரிந்து கொள்வதும் நமது கடமையாகும். நாம் தெரிந்து கொள்வதோடு தெரியாத பாமர மக்களுக்கும் தெரியப்படுத்துவோம்.

No comments:

Post a Comment