தமிழகத்தில் காணாமல் போனவர்கள், காணாமல் போன குழந்தைகள், அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பான விவரங்களை இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறையின் இணையதளமான www.tnpolice.gov.in, www.ncrb.gov.in, www.eservices.tnpolice.gov.in, www.vikaspedia.in ஆகிய இணையதளங்களில் தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள், காணாமல் போன குழந்தைகள், அடையாளம் தெரியாத சடலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களும், அது தொடர்பான விவரங்கள், வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம், தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்ணும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெற்று பயன்பெறலாம்.
காணாமல் போனவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்தால்
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
இதேபோல, அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த தகவல் கிடைத்தால் தொடர்புடைய காவல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உதவி செய்யலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment