சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தில் இணையாமல் இருப்பவர்களுக்கு இந்த சிலிண்டருக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு அதன் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான நேரடி மானியம் வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேரடி மானியம் வழங்கும் திட்டத்தில் சேர்வதற்கான கடைசி நாள் இந்த மாதம் 31ம் வரை உள்ளது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் சில ஏஜென்சிகள் நேரடி மானியத்தில் இணையாதவர்களுக்கு அவர்களுக்கான சிலிண்டருக்கு முன் பதிவு செய்வதையும், அதன் வினியோகத்தையும் திடீரென்று நிறுத்தி விட்டது.
நேரடி மானியத்தில் இணைய இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இப்படி இருக்கும் போது, சிலிண்டர் வினியோகத்தை நிறுத்தும் செயல் கடுமையான கண்டனத்துக்குரியது’ என்று பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘நேரடி மானியம் திட்டத்தில் சேராதவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை நிறுத்துவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது’ என்றனர்.
No comments:
Post a Comment