சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்க முடிவு விரைவில் 100 பள்ளிகளில் விரிவாக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 27, 2016

சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்க முடிவு விரைவில் 100 பள்ளிகளில் விரிவாக்கம்

மதுரை மாவட்ட பள்ளிகளில் சிறந்த சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு, நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப்பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

மதுரையில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 359 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் இயங்குகின்றன. இம்மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 50 மாணவர்கள் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு சூழல் பாதுகாப்பு, 'துாய்மை இந்தியா' திட்டம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர். மேலும், இம்மன்றம் சார்பில், கிராமத்தை தத்தெடுத்து அங்கு சுகாதார பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

மூலிகைத் தோட்டம்

இதுதவிர மருத்துவ குணம் நிறைந்த துளசி, துாதுவளை, குப்பை மேனி, சிறியாநங்கை, பெரியாநங்கை, ஓமவல்லி உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் அடங்கிய தோட்டம் அமைப்பதுடன், வேம்பு, சிவப்பு கொன்றை, மஞ்சள் கொன்றை, வாதம், பூவரசு, புங்கை போன்ற நிழல் தரும் மரங்களையும் நட்டு ஆண்டு முழுவதும் பராமரிக்கின்றனர்.

வாரத்திற்கு மூன்று முறை சுற்றுச்சூழல் மன்ற மேம்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. தவிர, பசுமை தினங்களில் இம்மன்றம் சார்பில், சிறந்த பணியாற்றிய மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. சிறந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், பள்ளிக்கல்வித்துறை சான்றிதழும் வழங்கப்படும்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி துாய்மை பணிகளை விரிவாக்க உள்ளோம். மேலும், மாவட்டத்தில் சிறந்த சுற்றுச்சூழல் மன்றங்களை தேர்வு செய்யும் ஆய்வுப்பணியையும் துவக்க உள்ளோம், என்றார்.

பசுமை தினங்களில் இம்மன்றம் சார்பில்,சிறந்த பணியாற்றிய மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. சிறந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், பள்ளிக்கல்வித்துறை சான்றிதழும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment