பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருது: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 27, 2016

பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருது: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகளை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். உடன் சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்டோர் | படம்: எம்.வேதன்
பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவி யல் விருதுகளை கடலோர பாது காப்புக் குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக் கும் வகையில் ‘தி இந்து’ குழுமம், ‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ், ‘தி இந்து’ (தமிழ்) வெற்றிக்கொடி மற்றும் சாய்ராம் கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து அறிவியல் விருதுகளை (சயின்ஸ் டாப்பர் விருது) ஏற்படுத்தியுள்ளன.

சென்னை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி களில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர் வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகள் வழங்கும் விழா சென்னை கீழ்ப்பாக் கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விருதுகளை வழங்கி னார். பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ள டக்கியது இந்த விருது. சிறந்த மாணவ, மாணவிகளை உரு வாக்கிய பள்ளிகளுக்கு கேட யங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, “ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் 10 சத வீத வினாக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பகுதி களில் இருந்தே கேட்கப்படு கின்றன” என்றார்.

சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வாழ்த்திப் பேசும்போது, “பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்கள் உயர் வாழ்வாதாரத்துக்காகவே வெளிநாடுகளுக்குச் செல்கிறார் கள். அந்த நிலையை நம் நாட்டி லேயே உருவாக்கி அவர்களை இங்கேயே தக்கவைக்க வேண்டும். பொறியியல் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்” என்றார்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ இன் ஸ்கூல் கல்வி உதவித் தொகை களை ‘தி இந்து’ இணை ஆசிரியர் கிருத்திகா ரெட்டி வழங்கினார். முன்னதாக, ‘தி இந்து’ முதுநிலை நிர்வாக ஆசிரியர் பி.ஜேக்கப் வரவேற்றார். ‘தி இந்து’ (தமிழ்) இணைப்பிதழ்கள் ஆசிரியர் அரவிந்தன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment