சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 23, 2016

சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை தரமணியில் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி யில் பிஏ, எல்எல்பி, பிபிஏ, எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ எல்எல்பி ஆகிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிப்பிலும் தலா 156 இடங்கள் உள்ளன.இந்த படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) பிஏ, எல்எல்பி, பிபிஏ, எல்எல்பி படிப்புகளில் சேர 1,573 பேரும், பிகாம்.எல்எல்பி படிப்பில் சேர 494 பேரும், பிசிஏ எல்எல்பி படிப்பில் சேர 308 பேரும் விண்ணப்பித்திருந் தனர். அவர்களின் தரவரிசைப் பட்டி யல் ஜுன் 13-ம் தேதி வெளியிடப் பட்டது. இந்த நிலையில், மேற் கண்ட ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல் கலைக்கழகத்தில் நேற்று தொடங் கியது.

முதல் நாளான நேற்று பிஏ. எல்எல்பி, பி.காம். எல்எல்பி படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாணவி எஸ்.தீபா 99.75 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவர் பி.அருண் பிரபு 99.25 கட் ஆப் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்த னர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பி.வணங்காமுடி, பதிவாளர் பி.சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிகாம். எல்எல்பி, பிசிஏ, எல்எல்பி படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து துணைவேந்தர் வணங்காமுடி நிருபர்களிடம் கூறும்போது, “5 ஆண்டு மற்றும்3 ஆண்டு கால எல்எல்பி படிப்புகளுக் கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 5 ஆண்டு படிப்புக்கான விண் ணப்பங்களை ஜுன் 30-ம் தேதிக் குள்ளாகவும், 3 ஆண்டு படிப்புக் கான விண்ணப்பங்களை ஜுலை 15-ம் தேதிக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும். 5 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு ஜூலை 2-வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment