மாதம் ரூ.500 உதவித்தொகையுடன் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 28, 2016

மாதம் ரூ.500 உதவித்தொகையுடன் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

சென்னை தி.நகரில் உள்ள ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு மையத்தில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு உதவித்தொகையுடன் பல்வேறு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

எம்எஸ் ஆபீஸ், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்), பொது அறிவு ஆகிய பயிற்சிகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.

பயிற்சிக் காலம் 11 மாதங்கள். பயிற்சிக்காலத்தில் மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிகள் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளன. தினமும் காலை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் 044-24342421, 24337387 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு மையத்தின் கவுரவ முதல்வர் எஸ்.சேகர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment