ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 30, 2016

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

இது குறித்து கேரள போக்குவரத்து ஆணையர் தோமின் ஜே  தக்கன்சேரி கூறுகையில், '' கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டில் நடந்த 14,482 இருசக்கர வாகன விபத்துகளில்,  1,330 பேர் பலியாகியுள்ளனர்.  இதில் 80 சதவீத உயிரிழப்பு, பலத்த காயம் ஏற்படுவதால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு,  ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோல் பங்குகளுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்''  என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment