குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 22, 2016

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ்

மற்றும் ஒளி வடிவில் ஆரம்பநிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர புதிய ஆப்ஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றை சரியாக உச்சரிக்கவும் இந்த ஆப்ஸ் உதவ உள்ளது.

247 தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் அவற்றை உச்சரிக்கும் ஆடியோக்களுடன் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனின் ஸ்க்ரீனிலேயே எழுத்துக்களை அழிக்கவும், சரியாக எழுதவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கல்வித்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் பக்தாச்சலம் கூறுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 40 சதவீதம் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக கண்டறிய தெரியாதவர்களாகவும், அவற்றை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த குறைபாட்டை போக்குவதற்கு இதுவரை எந்த ஆப்ஸூம் இல்லாமல் இருந்தது. இதனால் ஒலி-ஒளி வடிவில் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் ஜூலை 4ம் தேதி முதல் ரூ.50 க்கு இந்த ஆப்சை பெறலாம்.

இந்த ஆப்ஸ் பிரபலப்படுதஅதுவதற்காக தமிழகத்தில் உள்ள 800 பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளி ஆசிரியர்களிடம் கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஆப்ஸ் டவுன்லோட் செய்து, அதன் மூலம் வீட்டில் எளிய முறையில் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொண்டும்படி அறிவுறுத்தப்பட உள்ளது.

இந்த புதிய ஆப்ஸ்க்கு சுட்டி தமிழ் அறிச்சுவடி என பெயரிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், தமிழ் கற்றுத்தர அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்த ஆப்ஸ் மூலம் செய்து தரவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment