சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 29, 2016

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு:

தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல்:அதுபோல, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 23-இல் உடனடித் தேர்வு:இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதுபோல முதுநிலை பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வுவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களைச்சமர்பிக்கவும் ஜூலை 8 கடைசித் தேதியாகும்.இந்த உடனடித் தேர்வு சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment