1.6 கோடி போலியான ரேஷன் கார்டுகள் ரத்து: நிதித்துறை செயலர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 26, 2016

1.6 கோடி போலியான ரேஷன் கார்டுகள் ரத்து: நிதித்துறை செயலர் தகவல்

‘‘நாட்டில் 1.6 கோடி போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மானிய பணம் மிச்சமாகிறது’’ என்று மத்திய நிதித்துறை செயலர் அசோக் லவாசா கூறினார்.
நிதித் துறை செயலர் அசோக் லவாசா ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:
“சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும்
மானியத் தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.14,872 கோடி மத்திய அரசுக்கு மிச்சமாகிறது. இப்போது 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மானிய பணம் சேமிக்கப்படுகிறது.
மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை மேலும், 150 திட்டங்களுக்கு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நேரடிய மானியம் அளிப்பதால் திட்டத்துக்கு தி்ட்டம் சேமிக்கப்படும் பணத்தின் அளவு மாறுபடும். இதன்மூலம் உண்மையான பயனாளிகளுக்கு மானியத் தொகை செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது” என்று நிதித் துறை செயலர் அசோக் லவாசா கூறினார்.

No comments:

Post a Comment