வெற்றிகரமாக 20 செயற்கைக் கோள்களுடன் பாய்ந்தது பிஎஸ்எல்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 22, 2016

வெற்றிகரமாக 20 செயற்கைக் கோள்களுடன் பாய்ந்தது பிஎஸ்எல்வி

ஸ்ரீஹரிகோட்டா: ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இன்று காலை சுமார் 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் அதன் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். 

பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்டில், இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைகோள்கள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் 17 செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன. 

கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தியதன் மூலம், தனது சாதனையை தானே முறியடித்தது இஸ்ரோ.

No comments:

Post a Comment