அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேர ஆர்வம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 29, 2016

அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேர ஆர்வம்!

மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், பிளஸ் ௨, அல்லது டிப்ளமோ படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய நிலையுள்ளது. இவ்விரண்டு பிரிவுகளிலும் இடம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் அல்லது பொருளாதார சூழ்நிலையால், உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முடியாத மாணவர்களே தொழிற்பயிற்சி படிப்பு (ஐ.டி.ஐ.,) படிப்புகளை தேர்வு செய்யும் நிலை இருந்தது.

இந்நிலை தற்போது தலை கீழாக மாறி, பொறியியல் முடித்த மாணவர்கள், அறிவியல் பிரிவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் இப்படிப்பில் சேர்ந்து படிக்கின்றனர். ஐ.டி.ஐ., க்கு வரவேற்பு:ஒரு தொழிற்சாலை அல்லது ஒரு உற்பத்தி நிறுவனத்திலுள்ள பணியாளர்களின் கட்டமைப்பு, 1:3:10 என்ற விகிதத்தில் ஒரு உயரதிகாரி, பொறியாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழல் முற்றிலுமாக மாறி, ஒரு ஆண்டுக்கு லட்சக்கணக்கான பொறியாளர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.மாற்றாக, அடிப்படை தொழிற்பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்தது. இதன் வெளிப்பாடாகவே, வேலைவாய்ப்புகள் இருந்தும், இல்லாத நிலை உள்ளது.

இதன் அடிப்படையில், தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையாக இருப்பது அடிப்படை தொழிற்பயிற்சி பெற்ற மாணவர்கள். இந்த மாற்றத்தால், தொழிற் பயிற்சி மையங்களுக்கு மாணவர் களிடம் வரவேற்பு கூடியுள்ளது.

வேலைவாய்ப்பு மட்டுமின்றி சுயதொழில் செய்யவும் இப் படிப்பு உதவுவதால் மாணவர்கள் பயனுள்ளதாக கருதுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர். தற்போது கல்வியாண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஜூன் 30ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.skilltraining.govt.co.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment