அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் வெளியாகுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 27, 2016

அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் வெளியாகுமா?

இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கவுன்சிலிங்கில் விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய, எளிதாக கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத பட்டியலை அண்ணா பல்கலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல, கல்லுாரிகளின் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகார அந்தஸ்து, கடந்த வாரம் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெற்றன; எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெறவில்லை; எந்த கல்லுாரிகள் புதிதாக சேர்ந்தன என்பன போன்ற விவரங்களை, அண்ணா பல்கலை இதுவரை வெளியிடவில்லை.

மாறாக இணையதளத்தில், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், மாணவர்களும் ஏமாறாமல் தடுக்க, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பஸ் கட்டண சலுகை; விடுதி வசதி:

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள், அவர்களுடன் துணைக்கு வரும் ஒருவருக்கு, தமிழக அரசு பேருந்துகளில், 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல், வெளியூர்களிலிருந்து வரும் மாணவியர், உறவுப் பெண் துணையுடன் வந்தால் அவர்கள் தங்குவதற்கு, பல்கலை வளாகத்திலுள்ள ரோஜா விடுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கு முந்தைய நாள் வருவோர், மாலை, 6:30 மணிக்கு மேல் விடுதியில் தங்கி, மறுநாள் காலையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பின், கவுன்சிலிங் முடிந்ததும், மாலையில் விடுதியை காலி செய்து அடுத்த மாணவிக்கு இடம் கொடுக்க வேண்டும் என, பல்கலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

பல்கலை வளாகத்தில் விசாரணை மையம், உடற்பரிசோதனை மையம் மற்றும் கல்லுாரி வைப்புத்தொகை செலுத்துவதற்கான வங்கி கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல வங்கிகள் சார்பில், கடன் வசதிக்கான உதவி முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment