10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு; ’ஹால் டிக்கெட்’ பதிவிறக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 27, 2016

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு; ’ஹால் டிக்கெட்’ பதிவிறக்கம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், செய்தி குறிப்பில்:

அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 18.06.2016 அன்று பிற்பகல் முதல் www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இந்நாள்  வரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை உடன் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

www.tngdc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று DEPARTMENT OF EXAMINATION ONLINE APPLICATION என்பதனை Click செய்து தோன்றும் SSLC Hall Ticket Download என்பதனை Click  செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:

தேதி பாடம்

29.06.2016 தமிழ் முதல் தாள்

30.06.2016 தமிழ் இரண்டாம் தாள்

01.07.2016 ஆங்கிலம் முதல் தாள்

02.07.2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்

04.07.2016 கணிதம்

05.07.2016 அறிவியல்

06.07.2016 சமூக அறிவியல்

08.07.2016 விருப்பாடத் தேர்வு

No comments:

Post a Comment