உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 9, 2016

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்

பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மையம் கோவையில் நிறுவ 1 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைகழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி முறைப்படிப்புகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் ஒரே வகையான பாடத்திட்டங்களை தயாரிக்க 5 கோடி ஒதுக்கீடு.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேரிடர் மீட்பு மேலாண்மை இணையத்தள மையம் ஏற்படுத்த 50 லட்சம் ஒதுக்கீடு.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு திறன் வளர்த்தல் மையம் 10 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைப்பாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு இளங்கலை பட்டப் பாடப்பிரிவு துவங்க 76 லட்சம் ஒதுக்கீடு.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மொழி பரிமாற்ற மேம்பாடு குறித்து இடைவெளி நிரப்பு பயிற்சிக்கு புத்தகங்கள் 12.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் பல்வேறு மேம்பாடு திட்டங்களுக்கு 30.74 கோடி ஒதுக்கீடு.
உள்ளிட்ட 17 அறிவிப்புகள் உயர்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்.

No comments:

Post a Comment