சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 10, 2016

சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு,
பரிந்துரைக்கும் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பழகன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் எந்தவித இடையூறுமின்றி, தொய்வில்லாமல் நடைபெற்று வருவதாகவும், துணைவேந்தர்களை தேர்வு செய்ய 3 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இக்குழுவினர் பரிந்துரை செய்யும் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment