ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 10, 2016

ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவிப்பு

ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவிப்பு 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவித்தார். மல்டி மீடியா தமிழக சட்டசபையில் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்த துறையின் அமைச்சர் பா.பெஞ்சமின் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

பாடங்களை பொருள் உணர்ந்து விளக்கத்தோடு படிப்பதற்காக பாடநூல்களிலுள்ள அச்சுப் பகுதிகளுடன் படங்கள், குரலொலிகள் மற்றும் காணொலிகளை புகுத்தி மாணவர்களுக்கு மல்டி மீடியா அனுபவத்தை தரக்கூடிய வகையில் தற்போதுள்ள பாடப்புத்தகங்கள் இ பப்ளிகேஷன் பாடநூல்களாக மாற்றப்படும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் கல்வி புத்தகங்கள், டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சமநிலைக் கல்வி ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 93 பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகமாக தரம் உயர்த்தப்பட்டு, 93 ஊர்ப்புற நூலகர் பணியிடம் உருவாக்கப்படும். மாவட்ட மைய நூலகங்களுக்கு சூரியஒளி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும். அடிப்படை கல்வி பெற்றுள்ள நபர்களுக்கு சமநிலைக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம் வகுப்பு நிலையில் கல்வி கற்பிக்கப்படும். இத்திட்டம் விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும். சிறப்பு பயிற்சி மையம் போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, 32 மாவட்ட மைய நூலகங்களுக்கும் நடப்பு ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப் புத்தகங்கள், இரண்டிரண்டு தொகுப்புகள் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்விற்காக மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்குமான சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும். ஹாக்கி விடுதி மாணவர்களின் மொழித்திறன் மேம்பாட்டுக்காக, 3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில இலக்கண அறிவுக்கான இலக்கணப் பயிற்சித்தாள் ஆங்கில பாடப்புத்தகங்களுடன் இணைத்து வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாணவர்களுக்கான சிறப்பு ஹாக்கி விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment