தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல்
மருத்துவக் கல் லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங் கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள நிர்வாக ஒதுக் கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழை வுத் தேர்வை நடத்தியது. தமிழகத் தில் சுமார் 23 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடந்தது. தமிழகத்தில் சுமார் 13,500 பேர் உட்பட நாடு முழுவதும் 4.57 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ-யின் www.aipmt.nic.in என்ற இணைய தளத் தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை வரும் 17-ல் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment