ரேஷன் கடைகளில் ஆதார் எண்
பதிவு செய்தால் மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படவுள்ளது. எனவே, 'நுகர்வோர் விரைந்து ஆதார்
எண்களை பதிவு செய்ய வேண்டும்,' என, உணவு வழங்கல் துறையினர்
அறிவித்துள்ளனர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2017 முதல் 'ஸ்மார்ட் கார்டு' வழங்க
தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரேஷன் கடைகளில் நுகர்வோர்களின் ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்படுகின்றன.
எண்களை பதிவு செய்ய ரேஷன்கடைகளுக்கு விற்பனை முனைய (பி.ஓ.எஸ்.,) கருவிகள் வழங்கப்
பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஒன்பது லட்சத்து 43 ஆயிரத்து 668 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில்
உள்ளன.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவா மற்றும் அலுவலர்கள் 1,389 ரேஷன்
கடைகளிலும் விற்பனை முனைய கருவிகளை வழங்கி பதிவு பணி
நடத்தி வருகின்றனர். தற்போதுவரை அலைபேசி எண்கள் 73 சதவீதமும், ஆதார் எண்கள் 53 சதவீதமும் பதிவாகியுள்ளது.
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்கள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும் ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. நுகர்வோர் பொருள் வாங்கினால் அலைபேசியில் குறுந்தகவல் வரும். பொருள் வாங்காமல் வந்தால் உணவு வழங்கல் துறையில் புகார் செய்யலாம்.
எனவே ஆதார் எண் பதிவு
செய்யாதோர் ரேஷன்கடைகளில் விரைந்து பதிவு செய்ய வேண்டும்.
தவறினால் அவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படாது, என்றார்.
No comments:
Post a Comment