கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு முடிந்து, ஆறு மாதங்கள் ஆன பிறகும் முடிவுகள் வெளியாகவில்லை. கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர,
மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.
நெட் தேர்வுக்கு இணையான, செட் தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, அன்னை தெரசா பல்கலை மூலம், செட் தேர்வு, பிப்., 20ம் தேதி நடத்தப்பட்டது. ஆறு மாதங்களாகியும், முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், பல பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, பணி நியமன அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேலான பட்டதாரிகள், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment