மாணவர்களின் 12 ஆண்டு கால முயற்சிக்கு கிடைக்கும் வெற்றிதான் பிளஸ் 2 மதிப்பெண்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் கருத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 23, 2017

மாணவர்களின் 12 ஆண்டு கால முயற்சிக்கு கிடைக்கும் வெற்றிதான் பிளஸ் 2 மதிப்பெண்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் கருத்து

பள்ளி மாணவர்களின் 12 ஆண்டு கால முயற்சிக்கு கிடைக்கும் வெற்றிதான் பிளஸ் 2 மதிப்பெண் என்று 'தி இந்து' தமிழ் நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து சென்னையில் நடத்திய 'இனிது இனிது தேர்வு இனிது' மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் 'தி இந்து' தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து 'இனிது இனிது தேர்வு இனிது' என்ற பிரத்யேக வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களைத் தொடர்ந்து சென்னையில் 'இனிது இனிது தேர்வு இனிது' மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. 'தி இந்து' தமிழ் நாளிதழும், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அவர் பேசும் போது கூறியதாவது:

தேர்வு என்பது பள்ளி மாணவர் களோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. ஆனாலும், தேர்வு என்றதும் மாணவர்களுக்கு பயம் ஏற்படு கிறது. முன்பெல்லாம் பொதுத் தேர்வு என்றால் மாணவர்கள்தான் அச்சப்படுவார்கள். ஆனால், இப்போது தேர்வு சமயத்தில் பெற் றோரும் அச்சம்கொள்கிறார்கள். ஏதோ ஒரு போட்டிக்கு, ஒரு போருக்குத் தயாராவது போல் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலை உள்ளது.

பொதுத்தேர்வு என்பது நாம் நினைப்பது போன்று சிரமமான காரியம் அல்ல. அது இனிதான ஒன்று என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வினை பல லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். எனவே குறிப்பிட்ட கல்லூரிகளில், குறிப்பிட்ட படிப்புகளில் சேர வேண்டுமானால் அதிக மதிப்பெண் எடுத்தாக வேண்டும். எனவேதான் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் மிக மிக முக்கியமாகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண் மாணவர்களின் 12 ஆண்டு கால முயற்சிக்கு கிடைக்கும் வெற்றி. பள்ளியில் எழுதும் தேர்வுகளைப் போன்றுதான் பொதுத்தேர்வும். காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வு என ஒவ்வொரு தேர்விலும் மதிப் பெண் அதிகரித்தால் பொதுத்தேர் விலும் மதிப்பெண் அதிகரிக்கும்.

இன்றைய மாணவர்களிடம் எந்த படிப்பில் எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை இருக்கிறது. மாணவர்கள் தங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கனவுகளை நனவாக்க முயற்சி முக்கியம் என்பதை உணர வேண்டும். தங்கள் படிப்புக்குப் பின்னால் பெற்றோரின் மிகப்பெரிய தியாகம் இருக்கிறது என்பதை மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நரேஷ் கூறினார்.

வடசென்னை

மாவட்ட கல்வி அதிகாரி எத்திராஜுலு சிறப்புரை யாற்றிப் பேசும்போது, "பிளஸ் 2 தேர்வு மாணவர்கள் வாழ்க்கையி்ன் திருப்புமுனை ஆகும். மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளது. எனினும் இந்த குறைந்த காலத்திலும் திட்டமிட்டு நன்கு படித்தால் தேர் வில் அதிக மதிப்பெண் பெற முடியும். பொதுவாகவே, பொதுத்தேர்வு என்றதும் மாணவர்கள் அச்சப்படு கிறார்கள். பயமின்றி தேர்வு எழுதி னால் கொஞ்சம் படித்த பாடம்கூட நன்கு நினைவுக்கு வரும்.

அதேநேரத்தில் பயத்துடன் தேர்வெழுதினால் நன்கு படித்த பாடங்கள்கூட நினைவுக்கு வராமல் போகலாம். எனவே, மாணவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் தேர்வெழுத வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

கோவை

நன்னெறிக்கழக தலை வர் இயகோகா என்.சுப்ரமணியம், ஸ்ரீவித்யா கல்வி மைய கவுரவ இயக்குநர் எஸ்.பி.சுப்ரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உரையாற்றினர். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் எம்.செந்தில்குமார் கல்லூரியில் சேரும் புதிய மாணவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை எடுத்துரைத்தார்.

பிளஸ் 2 தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் முறை, தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற் கான உத்திகள் குறித்து உயிரியல் ஆசிரியர் என்.குமாரவேல், இயற்பியல் ஆசிரியர் ஏ.திருமாறன், வேதியியல் பேராசிரியர் ஏ.பரீத் அஸ்லாம், கணித ஆசிரியர் ஆர்.மணிமாறன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

முன்னதாக, எஸ்கேஆர் பொறி யியல் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீ யரிங் துறையின் தலைவர் பேராசிரி யர் ஏ.சங்கர் வரவேற்று நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார். விழாவில் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் தலைவர் கே.ராம தாஸ், இயக்குநர் சுகந்தி ராம தாஸ் மற்றும் பேராசிரியர்கள் பங் கேற்றனர். நிறைவாக கல்லூரியின் செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள் ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட

No comments:

Post a Comment