மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர,முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 24, 2017

மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர,முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில்பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்தார்.இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2005 -ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் உள்பட அனைத்து தொழில் முறைக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2006 -ஆம் ஆண்டு தொழில் முறைக் கல்வி நிலையங்களுக்கான நுழைவுச் சட்டத்தை இயற்றி அதற்கான தனி நுழைவுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.ஊரக, ஏழை, எளிய, சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களால் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்களுடன் பொது நுழைவுத் தேர்வுகளில் போட்டியிட இயலாது என்பதால் அத்தகைய மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மருத்துவக் கல்விக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வெளிப்படையான சேர்க்கை முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்குபெரும் அநீதி இழைப்பதாகவும் உள்ளது.எனவே மருத்துவம், மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழகத்தில் பின்பற்றப்படும் வெளிப்படையான மாணவர் சேர்க்கை முறையை தொடர்ந்து பின்பற்ற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என ஆளுநர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment