மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 28, 2017

மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது

மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29)
நடக்கிறது.
வளமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்க க்கு 'ஜெயித்துக்காட்டுவோம்', உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கும் 'வழிகாட்டி' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தினமலர் நடத்துகிறது.
இந்த வகையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான 'நீட்' எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து மாணவர் தெரிந்துகொள்ளும் வகையிலும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும், இந்தாண்டு முதல் முறையாக மதுரையில் தினமலர் இக்கருத்தரங்கை நடத்துகிறது.கருத்தரங்கு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கும். இதில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரையான முழு விவரங்கள், தேர்வுக்குரிய பாடங்கள் எவை என்பது குறித்து வல்லுனர்கள் வழிகாட்ட உள்ளனர்.கருத்தரங்கில் மாதிரி வினாத்தாள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம். மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.நிகழ்ச்சியை நிகிதா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஸ்டடீஸ் (சி.பி.எஸ்.இ.,) மற்றும் டைம் மேனேஜ்மென்ட் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து வழங்குகின்றன

No comments:

Post a Comment