ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 23, 2017

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்

தமிழக சட்டசபையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கடந்த 1.6.2011 முதல் பொது
விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 5.7.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், தமிழ்நாடு இச்சட்டத்தை செயல்படுத்தவில்லை என்பதால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மாதாந்திர உணவு தானியங்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் தமிழ்நாட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த ஒரு கிலோ அரிசி 8.30 ரூபாய் என்பதற்கு பதிலாக அடிப்படை ஆதார விலையான ஒரு கிலோ 22.54 ரூபாய் என்ற நிலையில் மட்டுமே வழங்க முடியும் என்று 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு மாநில அரசிற்குத் தெரிவித்தது.
மேலும், கூடுதல் ஒதுக்கீடாக மாதந்தோறும் தேவைப்படும் 27,969 மெட்ரிக் டன் அரிசி இனி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மாநில அரசு ஆண்டு தோறும் 2,730.95 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, மாநில அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் 2013-ம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடிவு செய்தது.
இதன்படி தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தோடு அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் வேறுபாடின்றி அரிசி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து உரிய வகையில் செயல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்த, அதன் செயலாக்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக குடும்ப அட்டைகளை “ஆதார்” எண்ணுடன் இணைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி முதல் “ஸ்மார்ட்” குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment