TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அமைச்சரின் அறிவிப்பு - தேர்வர்கள் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 29, 2017

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அமைச்சரின் அறிவிப்பு - தேர்வர்கள் குழப்பம்

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அமைச்சரின் அறிவிப்பு - தேர்வர்கள் குழப்பம்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுக்கு இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை பத்து தேர்வுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் 2012-ல் நடைபெற்ற தேர்வில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் அதனை தொடர்ந்து 2013 தகுதித் தேர்வில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தநிலையில்,
தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்து எப்போது பணிநியமன அறிவிப்பு வரும்?  தேர்வு வரும் என ஆவலுடன் தேர்வர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கல்வி அமைச்சர் தினந்தோறும் அறிவித்து வரும் தகவலால் தேர்வர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். 

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

Nov 10, 2016 
TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

Nov 21,2016 
TET தேர்வு மூலம் விரைவில் 4500 பணியிடம் வரைநிரப்பப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி

Jan 11, 2017 
புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

Jan 26, 2017 
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

Jan 27, 2017 
TNTET: ஏப்ரல் 30க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர்

இதில் தேர்வர்களின் குழப்பம் என்னவென்றால் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற தேர்வர்களை கொண்டு தற்போதுள்ள பணியிடம் நிரப்பப்படுமா?  அல்லது புதிய தேர்வு வைத்து நிரப்பப்படுமா என்பதை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வரவுள்ளது.அதை மட்டுமே அமைச்சர் உறுதி செய்துள்ளார்.(அறிவிப்பு நிஜமாகுமா?)

அடுத்து PGTRB தேர்வு வருவதாக 6 மாதத்திற்கு மேல் பல்வேறு ஊடகங்களில் செய்திவரும் நிலையில் தாமதத்திற்கான காரணத்தையும் தேர்வு எப்போது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தி தேர்வர்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்யவேண்டும்.

முன் ஏற்பட்ட குழப்பங்கள் போல் இல்லாமல் சரியான திட்டமிடலுடன் இனிவரும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment